அன்று ஒருமுண்டனுக்கு இரண்டுபேர் என்பது நாட்டு வழக்க மொழி. முண்டன் என்பது முரடன், இருவருக்கு மேல் பலம்பெற்று காவல்புரியும் வலிமை மிக்கவன் என்று பொருள். கொங்கு நாட்டில் கொங்கினி அரசன் துர்விநிதன் ஆட்சி கி.பி. 600 முதல் 655 வரை 55 ஆண்டு நடந்தன. தன்மகன் சாலுக்கிய முதலாம் விக்கிரமாதித்தன் ராஜபிரதிநிதி ஆனபின் மூவேந்தர் ஆட்சியை முறைபடுத்தி புது அரசியலமைப்பை கொங்கு நாட்டில் தோற்றுவித்தான். கொங்கு 24 நாடு பிரித்து கூட்டமாக வாழும் வெள்ளாளர்களுக்கு குலம் வகுத்து வாழும்பதிக்கு பெயர்சூட்டி, ஊராளி காமிண்டரை (காமிண்டன் = காவல் + முண்டன்) நியமித்தான். கிராமதலைவர், மிட்டாமிராசு (வசூல்செயதல்), சிற்றரசர், சொல்வாக்குமிக்க உயர்சமூக அந்தஸ்த்துள்ளவர் பிரதிநிதியாக நியமித்த காமிண்டர் ஊரை பாதுகாப்பதோடு நாட்டு நடப்பில் பங்கு பெற்று, படைவீரர், தூதுவர், வரி வசூல் செய்பவர், எல்லையை பாதுகாப்பவர், படையெடுப்புக்கு உதவுபவர், மோதிகொள்ளபவர் இவர் உதவியை நாடிவருபவருக்கு விசுவாசம் மிக்கவராக இருந்து வந்தனர்.உள்நாட்டில் அமைதியை நிலைநிறுத்தி, செளபாக்கிய வாழ்க்கையை முறைபடுத்தி, குடிமக்களுக்கு தொல்லை வராவண்ணம் பாதுகாத்து, அநீதி தலைதூக்காமல் கட்டுபடுத்தி, நிர்வாகதிறமை பெற்ற காமிண்டர்களில் பலரை சிற்றரசராக நியமித்தனர். கவுண்டர், கண்டர், கவுடர் என்பது காமிண்டரை குறிப்பதாகும். காமிண்டன், முதலி என்ற சிறப்பு பெயர், பெருமைபெற்ற மக்கள் உறவினருக்கு கொடுத்தனர். ஆரம்ப காலத்தில் வெள்ளாளர் குல பெயர்சேர்த்து பசிரப்பண்ணன், காடைசிற்றன், வெள்ளந்தை வேம்பணன், பயிரன்செம்பூதன், குழலிவெண்டுவன் என்று அழைத்து வந்தனர். இன்று ஜாதி பட்டம் “கவுண்டர்” என்ற பெயர் அப்போது அழைக்கப் பெறவில்லை.வெள்ளாளர் குலமக்கள் மக்கள் கொங்குநாட்டில் குடியேறிய 'காமிண்டர்' பட்டம் பெற்று பெரும்பான்மையாக இருந்ததால் பிற்காலத்தில் அது கவுண்டர் என்று மருவி ஒரு சமூகப்பெயராக வெள்ளாளர்குல மக்களிடம் நிலைத்துவிட்டது. கொங்கு 24 நாட்டில் வெள்ளாளா குலமக்கள் குலம் பிரித்தல், ஆரம்பகால கிராம, நாடு அமைப்பு, அரசு அமைப்புமுறை, காமிண்டர் தோற்றம் ஆகியவற்றை துர்விநிதன் ஆட்சி காலத்தில்தான் முதன்முதலாக அமைத்தனர்.கவுண்டர் பட்டம் பல சமூகத்தினரிடம் இருந்தாலும் அவர்களில் சீர், சிறப்பு புகழ்ஓங்கி பண்டைகால பெருமையில் பழுது, விண்ணம்படாது காலங்காலமா பாதுகாத்துவந்த மக்கள் காராளவம்சவெள்ளாளர் மக்கள் ஆவர். அதனால் தான் கவுண்டர் என்ற பட்டப்பெயர் அவர்களிடம் நிலைபெற்றுவிட்டது. இன்று கவுண்டர் என்றாலே காராளவம்ச வெள்ளாளகவுண்டர் தான் முதல் நிலை பெற்று முதண்மையாக நிற்கின்றனர்.......
மேலும் விரிவாக படிக்க "கொங்கு குரல்" பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொங்கு கலாச்சாரப் பண்பாடுகள்" புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர்,
டாக்டர். பி.கே.சின்னசாமி
9025745467