காடை குல வரலாறு

காடை குல வரலாறு

காராளவம்ச வெள்ளாளர் குலங்கள்

காராளவம்ச வெள்ளாளர் குலங்களில் முதன்மையும், சிறப்பும், பெருமையும் பெற்ற குலங்களில் காடை குலமும் ஒன்றாகும். பண்டைக் காலத்தில் கங்கு பகுதி என்றழைக்கப் பெற்ற வனத்தில் புகுந்து துறை கொண்டு பதி ஏற்படுத்திய இடமே பூந்துறை என்றழைக்கப் பெற்றது. பண்டைக் கால கொங்கு நாட்டின் தலைமை தென்கரை நாடாக இருந்தது.

மூவேந்தர்கள் தங்கள் நாட்டில் வறட்சியை போக்கி பசுமை ஏற்படுத்த சித்தரை அணுகி கேட்ட போது கொங்கு நாட்டில் கருவூரில் பசிவதீஸ்வரர் கோயில் கட்டி பிரதிஷட்டை செய்தால் அக்குறை நீங்கும் என்று அருள்வாக்கு கூறிடவே கருவூரில் பசுவதீஸ்வரர் கோயிலில் கட்டி குடமுழுக்கு விழாவினை நடத்திட கலசம் நிலை கொள்ளாதது போகவே பூந்துறை நாடு நன்னன் கருவூர் சென்று கலசம் தொட்டு வைக்கவே கலசம் நிலை கொண்டது.

மூவேந்தர்களின் கெளரவம், மரியாதை எல்லாம் பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடத்துவதிலேயே இருந்ததால் அதை நிறைவேற்றி தந்த பூந்துறை காடை குலம் நன்னன் அவர்கள் கலசம் தொட்டு வைத்து நிலை பெற்றதால் மூவேந்தர்களின் கெளரவம் எல்லா சிறப்பும் பெருமையும் காக்கப் பெற்றதால் மூவேந்தர்கள் பூந்துறை நாட்டு நன்னன் எல்லா தகுதியும் உடையவர் என்பதால் நன்னாவுடையார் என்று பட்டம் அளித்து கொங்கு நாட்டின் தலைமை நாடு இனி பூந்துறை நாடாகும் என்று அறிவித்தனர். அதோடு பூந்துறை நாட்டில் எந்த கோவிலும் விபூதி பெறும் முதல் மரியாதை பூந்துறை காடை குல மக்களுக்கென்று அறிவிப்பும் செய்தனர்.

"மேடை புகழ்ந்து வரும் புலவோரை அழைத்து 
காடை குலாதிபன் பூந்துறை நாடன்".
"கோடை விநாயகன் பெற்ற குமரவேள் முன்வந்து
குலவும் தெய்வக் காடை விநாயகனே!"

என்று இலக்கியங்களில் காடை குலம் என்று இடம் பெற்றுள்ளதை காணலாம். காணிப்பாடல் செப்பேடு, கல்வெட்டு, ஓலைப்பட்டயம் போன்ற அனைத்து ஆவணங்களிலும் காடை குலம் என்று பெயர் பெற்று இருப்பதை காணலாம்.

கொங்கு நாட்டில் புகுந்து துறை கொண்ட காலத்தில் எதிரிகளிடமிருந்து தங்களை காப்பாற்ற காடை குருவிகள் சலிக்காமல் குரல் கொடுத்து பாதுகாத்த காரணத்தால் அந்த குருவியின் பெயர் நாமம் நிலைபெறும் வகையில் காடை குலம் என்றும் தங்களின் குலசின்னமாக காடை குருவியை கொண்டனர். இன்றும் காடை குருவியை புனித பறவையாக கருதி காடை குருவியை உணவாகக் கொள்ளமாட்டார்கள்.........

மேலும் விரிவாக படிக்க "கொங்கு குரல்" பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொங்கு கலாச்சாரப் பண்பாடுகள்" புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

ஆசிரியர்,
டாக்டர். பி.கே.சின்னசாமி
9025745467


இலவசமாக வரன் தேட இங்கு பதிவு செய்யவும்  -

**Register for free**