கண்ணன்‌ குல வரலாறு

கண்ணன்‌ குல வரலாறு

காராளவம்ச வெள்ளாளர் குலங்கள்
காராளவம்ச வெள்ளாளர்‌ மக்களில்‌ ஜனத்தொகையில்‌ காணிகள்‌ அதிகம்‌ பெற்று முதன்மையான குலமாக விளங்கும்‌ குலங்களில்‌ கண்ணன்குலம்‌ ஒன்றாகும்‌. ஜனத்தொகையில்‌ முதன்மையான இடமும்‌ கொண்ட குலம்‌ கண்ணன்‌ குலமே ஆகும்‌. ஒரு கால கட்டத்தில்‌ கன்னிவாடி கண்ணன்‌ குலம்‌ நல்லம்மாளை இடைக்காலப்பாடி பட்டக்காரர்‌ என்கிழைக்கின்ற வன்னிய குலமகனுக்கு பெண்‌ கேட்டு வந்த விவகாரத்தால்‌ கன்னிவாடியை விட்டு வெளியேறி வந்த கண்ணன்‌ கூட்டத்தினர்‌, அமராவதி ஆற்றை கடந்து வரும்‌ போது ஆடை நனையாமல்‌ வந்தவர்கள்‌ கண்ணன்‌ குலம்‌ என்றும்‌ ஆடை நனைந்து வந்தவர்கள்‌ கண்ணந்தைகுலம்‌ என்றும்‌ வெளி யேறிச்‌ சென்றவர்கள்‌ போக மீதி இருந்தவர்‌ அங்கேயே தங்கி எந்த பிரச்சனை வந்தாலும்‌ எதிர்கொள்வோம்‌ என்று திடமனதுடன்‌ கன்னிவாடியிலேயே தங்கியவர்கள்‌ கன்னிவாடி கண்ணன்‌ குலம்‌ என்றும்‌ அழைக்கப்‌ பெற்று வரலாயினர்‌. 

இன்றும்‌ இம்மூன்றும்‌ தனித்தனியாக பிரிந்து வளர்ந்து வந்தாலும்‌ எல்லோரும்‌ கண்ணன்‌ குலப்‌ பங்காளி முறையே ஆகும்‌. இவர்களுக்குள்‌ பெண்‌ எடுத்தல்‌, பெண்‌ கொடுத்தல்‌ உறவுமுறை அறவே இல்லை. அதேபோல்‌ கண்‌ சிவந்து இருந்ததால்‌ செங்கண்ணன்குலம்‌ என்று அழைக்கப்‌ பெற்று வருகின்றனர்‌. அவர்களுக்கும்‌ கண்ணன்‌ குலமக்களுக்கும்‌ பெண்‌ கொடுத்தல்‌, பெண்‌ எடுத்தல்‌ உறவு முறையானது பங்காளி முறை ஆவதால்‌ இதுவரை இல்லை.  

சேர மன்னன்‌ சோழ மன்னனின்‌ மகளைத்‌ திருமணம்‌ செய்த போது தன்‌ மகளுடன்‌ எண்ணாயிரம்‌ வேளாளர்‌ மக்களையும்‌ அனுப்பி வைத்தான்‌. அவர்களுக்கு தலைமை தாங்கி வந்தவர்‌ கண்ணன்‌ குலத்தவராவார்‌ என்பதை  

"கண்ணன்‌ ஆனங்கூர்காணிமுத்தையனை  
மன்னவர்‌ சபையில்‌ வரவழைத்தே தான்‌  
எண்ணாயிரம்‌ கோத்திரத்து னோர்க்கு அரசன்‌  
நண்ணாக கொங்கு காடதை விளக்கம்‌ செய்து 
தான்‌ இருப்பீர்‌ சென்மெனஅனுப்ப உய்யவே
    சேரன்‌ உலகுக்கு வந்தார்‌"

ஏன்று அழகுமலை குறவஞ்சி கூறுகிறது.......

மேலும் விரிவாக படிக்க "கொங்கு குரல்" பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொங்கு கலாச்சாரப் பண்பாடுகள்" புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

ஆசிரியர்,
டாக்டர். பி.கே.சின்னசாமி
9025745467


இலவசமாக வரன் தேட இங்கு பதிவு செய்யவும்  -

**Register for free**