பழங்காலத்தில் தொண்டைநாட்டின் வேணாடு அரசு புரிந்து வந்த வேணாவுடையாரின் சிற்றரசர்களில் ஒருவரான கூரன் என்பவர் பெயரால் உருவான குலப்பெயரே கூரன் குலம் என்றாகி பிறகு கூரை குலம் என்றானது. வீட்டின் கூரை என்றால் நாங்களே என்று பெருமையுடன் கூறி வந்த கூட்ட மக்களை சுமார் 3௦௦௦ ஆண்டுகளுக்கு முன் கூரன் மன்னர் ஆண்டு வந்தார். சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன் வேணாவுடையாருக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் வேணாடு துறந்து வெளியேறி வரும் போது கூரம்பாடியை ஆண்டு வந்த கூரன் மன்னனும் நாட்டை விட்டு வெளியேறி சோழ நாடு வந்து மயிலாடு துறைக்கருகில் (மாயவரம்) கூரநாடு என்று ஒரு நாட்டை உருவாக்கி தம் மக்களோடு மீண்டும் ஆளுமை கொள்கிறார். அங்கு ஆடைகளிலேயே உயர்ந்த ஆடையான பட்டு துணிகள் நெய்யப் பெற்று வருவதைக் கண்ட கூரன் மன்னன் பட்டுக்களால் சேலை நெய்து தம்மின் காராள வம்ச வெள்ளாளர் மக்களின் வீட்டில் நடைபெறும் திருமண நிகழ்வில் ஓர் சீரான மணமக்கள் நிச்சயம் செய்யும் சீரின் போது பட்டுப் புடவையை கூர நாட்டுப்பட்டு புடவை என்று சீதனமாக கொடுத்து வருகிறார். அதுவே பிற்காலத்தில் நிலைபெற்று நிச்சயச்சீர் நிறைவு பெற்ற பின் பட்டுப் புடவை எடுத்தல் என்னும் சீராக இன்றும் இருந்து வருகின்றது.
பண்டைக் காலத்தில் பெண்ணையாற்றங்கரையில் ஒரு பகுதிக்கு கூரை நாடு (கூரம்பாடி) என்றும் சோழவள நாட்டில் மயிலாடுதுறை அருகில் ஒரு பகுதிக்கு கூரை நாடு என்றும் இருந்தது. அப்பகுதிகளில் தலைய நல்லூர் காணி பெறுவதற்கு முன்பு கூரை குல மக்கள் சிறப்பாக ஆட்சி அதிகாரம் செய்து வந்துள்ளனர் என்பதை வரலாறுகள் கூறுகின்றன.
காராளவம்ச வெள்ளாளர் குலமக்கள் கொங்கு நாட்டில் குடியேறியதை “கொங்கு காணியாளர் பட்டயம்” என்னும் ஆவணத்தில் கம்பர் 5௦௦௦ பிரபந்தங்கள் பாடியுள்ளதில் தொன்மையான குலங்களை கூறும் விருத்தப்பாடலில் கூரை குலம் குறிக்கப்பட்டுள்ளது. அப்பாடலில்
"சேரன் பாண்டியன் பகைன் செங்கொல் பெரியன் செம்பவழன்
தூரன் ஆந்தை காடை குலன் துவங்கு மடியன் ஓகாளன்
பாரம் சுமந்த பண்ணை படியந்துண்ணும் பயிரன் கீரன்
வேந்தன் கோவேந்திரன் கரை பொன்னர் கொங்கினரே?”
என்று கூறுகிறது.
மேலும் விரிவாக படிக்க "கொங்கு குரல்" பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொங்கு கலாச்சாரப் பண்பாடுகள்" புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர்,
டாக்டர். பி.கே.சின்னசாமி
9025745467