சாத்தந்தை குல வரலாறு

சாத்தந்தை குல வரலாறு

காராளவம்ச வெள்ளாளர் குலங்கள்

காராளவம்ச வெள்ளாளர்‌ குலங்களில்‌ தொன்மையும்‌ புகழும்‌, பீடும்‌ பெருமையும்‌ பெற்ற குலங்களில்‌ சாத்தந்தை, குலமும்‌ ஒன்றாகும்‌. இலக்கிய ஏடுகளில்‌ வல்லமை சேர்‌ சாத்தந்தை பாவலர்‌ சொற்பாடல்‌ படைத்த சாத்தந்தை, தாட்டிகன்‌ சாத்தந்தை,  கனிவு சாத்தந்தை, மங்கை மணி சாத்தந்தை என்று புகழ்ந்து போற்றி கூறும்‌ குலம்‌ சாத்தந்தை குலம்‌ ஆகும்‌.  

சாத்தன்‌ + தந்தை - சாத்தந்தை என்ற இலக்கண விருதிப்படி சாத்தந்தை குலம்‌ என பெயர்‌ பெற்றதாகும்‌. 3௦௦௦ ஆண்டுகளுக்கு முன்‌ தொண்டை நாட்டின்‌ தென்பெண்ணை ஆற்றின்‌ கரையில்‌ வேணாடு நாட்டின்‌ சிற்றரசர்‌ நாடுகளாக கூரம்பாடி, சாத்தம்பாடி, ஆந்தைப்பாடி, ஈஞ்சம்பாடி என்ற நான்கு நாடுகள் இருந்தன. இதில் சாத்தம்பாடியை சாத்தன்‌ என்கின்ற சிற்றரசர்‌ அரசு புரிந்து வந்தார்‌. அவரின்‌ கால்வழி தோன்றல்களே சாத்தந்தை குல மக்கள்‌ ஆவார்கள்‌. அவர்களே பிற்காலத்தில்‌ கலி 1051 இல்‌ வேணாட்டு பிடாரிப்‌ பெரியண்ணனை பின்‌ தொடர்ந்து சென்று குளித்தலை அருகில்‌ நிலை கொண்டு அதிபத்திய நல்லூர்‌ என்ற நங்கபுரத்தில்‌ காணிகண்டு சாத்தந்தையம்மன்‌ எனும்‌ குலதெய்வத்‌திற்கு பெயர்‌ நாமம்‌ சூட்டி கோயில்‌ கட்டி காணி கொண்டனர்‌ என்று அழகுமலை குறவஞ்சி சிறப்பிக்கின்றது. பழங்காலத்திலிருந்தே பெரியகுலம்‌, கூரைகுலம்‌, சாத்தந்தை குலம்‌, ஈஞ்சன்‌ குலம்‌ ஆந்தைகுலம்‌ மக்களுக்குள்‌ ஒரு பாச பிணைப்பு, ஒற்றுமை இருந்து வந்துள்ளது.  

பழங்காலத்தில்‌ தமிழ்மொழி வளர்த்தும்‌ மன்னர்களை புகழ்ந்து பாடியும்‌ பரிசில்‌ பெற்று வந்த புலவர்‌ வெகு மக்களின்‌ பெயர்கள்‌ சாத்தன்‌ என்று வருவதே சாத்தந்தை குலத்தில்‌ புலவர்‌ பெருமக்கள்‌ பலர்‌ இருந்துள்ளனர்‌ என்பது நற்சான்றுகளாகும்‌. பழங்காலத்தில்‌ புலவர்‌ என்று இல்லாமல்‌ மக்கள்‌, அரசர்‌ உட்பட பலரும்‌ சாத்தன்‌ என்று பெயர்‌ பெற்று இருந்தனர்‌. ஆவர்களில்‌ சீத்தலைச்‌ சாத்தனார்‌, பூதஞ்சாத்தனார்‌, கருவூர்கதப்‌ பிள்ளை சாத்தனார்‌, அமூர்‌ சாத்தனார்‌, ஆலம்பேரி சாத்தனார்‌ என்று புலவர்‌ பெருமக்களும்‌ ஒல்லையூர்‌ கிழான்‌ மகன்‌ பெருஞ்சாத்தான்‌, உரைசாத்தான்‌, அந்துவன்‌ சாத்தான்‌, பாண்டியன்‌ கீரஞ்சாத்தான்‌, பெரும்‌ பெயர்‌ சாத்தான்‌ போன்ற மன்னர்களும்‌ சாத்தந்தை குலத்திற்கு முன்னோடிகளாக திகழ்ந்து வந்துள்ளனர்‌.  

கொடுமணல்‌ அகழாய்வில்‌ கிடைக்கப்பெற்ற பானை ஓடு ஒன்றில்‌ 'சாத்தந்தை' என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல்‌ பல இடங்களில்‌ உள்ள கல்வெட்டுகளில்‌ 'சாத்தந்தை' என்னும்‌ சொல்‌ பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவாக படிக்க "கொங்கு குரல்" பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொங்கு கலாச்சாரப் பண்பாடுகள்" புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

ஆசிரியர்,
டாக்டர். பி.கே.சின்னசாமி
9025745467


இலவசமாக வரன் தேட இங்கு பதிவு செய்யவும்  -

**Register for free**