செங்கண்ணன்‌ குல வரலாறு

செங்கண்ணன்‌ குல வரலாறு

காராளவம்ச வெள்ளாளர் குலங்கள்
காராளவம்ச வெள்ளாளர்‌ குலமக்களின்‌ தொன்மையான குலமான கண்ணன்‌ குலமக்களில்‌ ஒரு சிலருக்கு கண்‌ சிவந்து காணப்பட்டதால்‌ செங்கண்‌ உடையார்‌ என்றும்‌ அவர்களே பிறகாலத்தில்‌ செங்கண்ணன்‌ என்றும்‌ அழைக்கப்பட்டனர்‌ என்பது வரலாற்று ஆய்வாளர்களின்‌ கூற்று. வளமான நெல்லுக்கு 'செந்நெல்‌' என்றும்‌ ஆட்சியாளரின்‌ நல்ல ஆட்சிக்கு 'செங்கோல்‌' என்றும்‌ தங்கத்தில்‌ மிக உயர்ந்த தங்கத்தை 'செம்பொன்‌' என்று அழைப்பது போலத்தான்‌ சிவந்த கண்ணனை செங்கண்ணன்‌ என்று அழைப்பதற்கும்‌ காரணமாகும்‌ என்று விளக்கமளிக்கின்றனர்‌.

செங்கண்ணல்‌, செந்நெல்‌, செம்பொன்‌, செங்கோல்‌ இவைகளில்‌ முதலில் வருகின்ற சொல்‌ நிறத்தையும்‌, சிறந்த பண்பையும்‌குறிப்பதாகும்‌. செங்கண்ணன்‌ என்போர்‌ சிறந்த பண்பாளர்களாகவும்‌ சிறந்த நிர்வாக திறமை பெற்றவர்களாகவும்‌, சிறந்த புத்திகூர்மை மிக்கவர்களாகவும்‌ இருப்பர்‌. அந்த வகையில்‌ இரணியமுட்டத்துப்‌ பெருங்குன்றூர்‌ பெருங்கெளசிகன்‌ புலவர்‌ பாடியபத்துப்‌ பாட்டில்‌ ஒன்றான மலைபடுகடாம்‌ இலக்கியத்தில்‌ பல்குன்றக்‌ கோட்டத்துக்கும்‌ செங்கண்‌ மாத்துவேனன்‌ நன்னன்‌ சேய்‌ நன்னன்‌ பாட்டுடை தலைவனாக பாடி சிறப்பித்துள்ளார்‌.

செங்கண்ணன்‌ (நற்றினை 22) காவிரிபூம்பட்டினம்‌ செங்கண்ணனார்‌ (அகம்‌ 103) மதுரைச்‌ செங்கண்ணனார் (அகம்‌ 32) தங்கால்‌ ஆத்திரேயன்‌ செங்கண்ணன்‌ (நற்றிணை 365) ஆகியோர்‌ சங்க கால இலக்கியங்களில்‌ பாடிய சிறப்புமிகு புலவர்‌ பெருமக்கள்‌ ஆவார்கள்‌ சோழ மன்னன்‌ வந்த 'கோச்செங்கட்சோழன்‌' என்றமன்னன்‌ பெயரில்‌ 'செங்கண்‌' என்ற சொல்‌ இருப்பதைக்‌ காணலாம்.

செங்கண்ணன்‌ குலமக்களின் ஆதி காணி விபரம்:

பண்டைக்‌ காலத்தில்‌ செங்கண்ணன்‌ மக்கள்‌ கீழக்கரை பூந்துறை நாட்டின்‌ சித்தளந்தூரில்‌ காணி பெற்று வாழ்ந்து வந்தனர்‌.கால சூழ்நிலையால் தங்களின் பண்டம்பாடிகளுக்கு மேய்ச்சல் நிலம்‌ தேடி சித்தளந்தூர்‌ காணிவிட்டு தென்‌ திசையில்‌ மேற்காக சென்று காங்கயம்‌ பகுதியில்‌ குடியேறினர்‌. சித்தளந்தூர்‌ காணி பெறுவதற்கு முன்‌ குளித்தலை வட்டாரத்தில்‌ 'தென்கரை ராஜகம்பீர வளநாடு' என்கின்ற கடம்பன்‌ குறிச்சியில்‌ காணி கொண்டு வாழ்ந்து வந்தனர்‌. தென்கரை ராஜகம்பீர வளநாட்டில்‌ வாழ்ந்து வந்த காலத்தில்‌ செங்கண்ணன்‌ குலதலைவர்‌ லிங்கண்ணன்‌ பல்லவதேசத்தின்‌ மேல்‌ படையெடுத்து பல்லவராசாவின்‌ தலையை வெட்டிச் சோழராசா காலடியில்‌ காணிக்கையாக்கி “பல்லவராயன்‌” என்ற பட்டம்‌ பெற்றார்‌. ஆதித்த சோழன்‌ தனக்கு துணை நின்று போர்‌ புரிந்த பல்லவராயனை கொங்கு நாட்டில்‌ தலைமைத் தளபதியாக நியமித்தார்‌.

சித்தளந்தூரில்‌ இருந்து வெளியேறிச்சென்று செங்கண்ணன்‌ குலமக்கள்‌ காங்கய நாடு சென்று அகிலாண்டபுரம்‌ பகுதியில்‌பண்டம்பாடிகளுக்கு பட்டியமைத்து வாழ்ந்து வந்தனர்‌. தம்‌ காணியில்‌ புதியதாக குடிபுகுந்து வாழ்ந்து வரும்‌ செங்கண்ணன்‌ குலம்‌ லிங்கண்ணனின்‌ அருமை திறன்‌ கண்டு வியந்து போன பெருங்குடி குலத்தலைவர்‌ வேல்‌ கவுண்டர்‌ தம்‌ மகளை லிங்‌கண்ணனுக்கு திருமணம்‌ செய்துவித்து காங்கயம்‌ காணி உரிமையும்‌ கொடுத்தார்‌. பின்னாளில்‌ வேல்‌ கவுண்டர்‌ காங்கயம்‌ காணி விட்டு வெளியேறி தென்திசையில்‌ சென்று புது காணி அப்பிபாளையம்‌ காணி கொண்டார்‌. இவ்வாறாக காங்கய நாட்டின்‌ காணி உரிமை செங்கண்ணன்‌ குல மக்கள்‌ பெற்றனர்‌. தாங்கள்‌ வாழும்‌ பகுதிக்கு அகிலாண்டபுரம்‌ என்று பெயர்‌ நாமம்‌ சூட்டி குல்‌ தெய்வமான................... கோயில்‌ கட்டி வணங்கி வரலாயினர்‌.

ஆதித்த சோழன்‌ மகன்‌ பராந்தக சோழன்‌ மன்னனுக்குரிய பட்டப்‌ பெயரான வீரசோழன்‌, வீரநாராயணன்‌, சங்கிராம ராகவன்‌என்னும்‌ பெயரில்‌ கொங்கு நாட்டின்‌ வீரசோழபுரம்‌, வீரநாராயண நல்லூர்‌, சங்கிராம நல்லூர்‌ ஆகிய ஊர்களை ஏற்படுத்தி சோழமன்னர்களுக்கு நட்பின்‌ இலக்கணமாக திகழ்ந்தனர்‌. சோழ மன்னர்‌, விஜயநகர மன்னர்‌, திருமலை நாயக்கர்‌ மன்னர்‌ ஆட்சிக்‌ காலங்‌களிலும்‌ செங்கண்ணன்‌ குலத்தார்‌ தொடர்ந்து பாளையக்காரர்களாக அரசு புரிந்து வந்தார்கள்‌. 

கரிலாலன் சோழனுக்கு உதவி புரிந்தவர்

சோழ நாட்டின்‌ உறையூரை அன்னியர்‌ முற்றுகையிட்ட போது கரிலாலனின் தாயார்‌ தப்பி கொங்குநாடு வந்தார்‌. அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்‌. கரிகாலன்‌ பிறந்தார்‌. சோழநாட்டில்‌ மன்னன்‌ இல்லாததால்‌ அமைச்சர பெருமக்கள்‌ அரசனைத்‌தேட பட்டத்து யானையை அனுப்பினர்‌. இச்செய்தி அறிந்த செங்கண்ணன்‌ குலத்தார்‌ கரிகாலனை பட்டத்து யானைமுன் நிறிறுத்தினர். யானையும்‌ கரிகாலனை அடையாளங்கண்டிடவே யானை உதவியுடன் சோழநாட்டிற்கு கரிகாலனை அனுப்பி வைத்தனர்‌. இதை கொங்கு மண்டல சதகப்‌ பாடலில்‌,

"கோலாற்சிறுவர் சிவிகையில்‌ ஏறநல்‌ குஞ்சரந்தன்‌
..............
............
மாலான செங்கண்‌ முடிசூட்டுவார்‌ கொங்கு மண்டலமே!"

என்று சிறப்பித்துக்‌ கூறுகிறது. தனக்கு பெரும்‌ துணைபுரிந்த செங்கண்ண குலம்‌ பல்லவராயர்களுக்கு தாம்‌ வணங்கிடும்‌ ......... தெய்வச்‌ சிலையை பரிசாக கரிகாலன்‌ அளித்தான்‌. பின்வரும செங்கண்ணன்‌ குலத்தாரும்‌ ........ வணங்கி
வரலாயினர்‌.
செங்கண்ணன்‌ குலத்தார்‌ புலவர்‌ பெருமக்களை மிகவும்‌ நேசித்து வந்தனர்‌ என்பதற்கு நற்சான்றாக கொங்கு மண்டல சதகப்பாடலே முன்னதாரணமாகும்‌. 
"கார்கொடுத்தோன்‌ மீன்கொடி கொடுத்தோன்‌ தென்கடப்பதார்‌
.
.............
..................
மார்கொடுத்தோன்‌ செங்கண்ணன்‌ வாழ்திரு கொங்கு மண்டலமே!
என்று சிறப்பித்துக்‌ கூறுகிறது....

மேலும் விரிவாக படிக்க "கொங்கு குரல்" பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொங்கு கலாச்சாரப் பண்பாடுகள்" புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

ஆசிரியர்,
டாக்டர். பி.கே.சின்னசாமி
9025745467


இலவசமாக வரன் தேட இங்கு பதிவு செய்யவும்  -

**Register here**